அ.தி.மு.க.வை ஸ்டாலினால் அசைக்க கூட முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க.வை ஸ்டாலினால் அசைக்க கூட முடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மதுரை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை மாவட்ட சர்வோதய சங்கம் இணைந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற மகாத்மா காந்தி அமைதி ஓட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 2 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஓட்டப்பந்தயப்போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கினார். இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பதிவாளர் சின்னையா, திருமங்கலம் உறுப்பு கல்லூரி அலுவலர் வினோத்குமார், சர்வோதய சங்க செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தேசதந்தை காந்தியடிகள் உடல் வலிமை பெற்றிருக்கவில்லை, என்றாலும் கூட அவரது எண்ணம் வலிமையாக இருந்தது. அவரால் உருவாக்கப்பட்ட அகிம்சையை உலக மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகின்றனர். அவரது உள்ளமும், மனமும், கட்டுப்பாடும் உறுதியானது ஆகும். மாணவர்கள் அவரின் புகழை பரப்பும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவரது தியாகத்தையும், கொள்கைகளையும் பரப்ப வேண்டும்.
ஜெயலலிதா அ.தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகள் இருந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்று சட்டமன்றத்தில் தெய்வ வாக்காக கூறினார். அதன் அடிப்படையில் மக்கள் பணியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். ஸ்டாலின் போன்ற தனிநபர் விமர்சனத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இந்த மக்கள் இயக்கத்தை ஸ்டாலின் என்ன, அவரது தந்தையான கருணாநிதியால் கூட அசைக்க முடியாது.
மக்கள் சக்தி மிக்க இந்த இயக்கம், சிறப்பான மக்கள் பணி செய்து வருகிறது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.