காந்தி சிலைக்கு கலெக்டர்-பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் காந்தி சிலைக்கு கலெக்டர் பிரபாகர்-பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2017-10-02 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்திஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி விக்னேஷ், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் தலைமை தாங்கி காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் ஜி.சுந்தரம், துணை தலைவர் எல்.எம்.ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் சாமிநாதன், சண்முகம், கோவிந்தராஜ், வெங்கடேஷ், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பிறந்தநாள் விழா ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கலந்துகொண்டு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் செல்வகுமாரசாமி, அரவிந்தராஜ், மண்டல தலைவர்கள் அயூப்அலி, ஜாபர்சாதிக், திருச்செல்வம், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் நெசவாளர் அணி மாநில தலைவர் ராஜேஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரபீக், ராமன், லட்சுமணன், பகுதி தலைவர்கள் அர்ஜுனன், பொட்டு ரங்கசாமி, வட்டார தலைவர் ரகுபதி, செயற்குழு உறுப்பினர் சேமலை, வார்டு தலைவர்கள் நடராஜன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். அதன்பின்னர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நேற்று காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

மேலும் செய்திகள்