பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 246 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் சுருக்கமாக எச்.பி.சி.எல். என அழைக்கப்படுகிறது. இதன் துணை அமைப்பு ஒன்று உயிரிஎரிபொருள் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. எச்.பி.சி.எல். பயோபியூல் லிமிடெட் எனப்படும் அந்த நிறுவனத்தில் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுமேலாளர் (நிர்வாகம்,-பொது), துணைப்பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், என்ஜினீயர் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்ட்) மற்றும் பல்வேறு பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 246 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
வயது வரம்பு:
நிர்வாக ரீதியான பணியிடங்களுக்கு 57 வயதுக்கு உட்பட்டவர்களும், நிர்வாகம் சாராத பணிகளுக்கு 55 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-9-2017-ந் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், மெக்கானிக்கல், எலக்டரிக்கல், சுகர் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பி.எஸ்சி. சுகர் டெக்னாலஜி படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான நேரடி நேர்காணலில் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நேரடி நேர்காணலுக்கு வரவேற்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி எடுத்து வருவதுடன், தேவையான சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். 3-10-2017 முதல் 6-10-2017 வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. அந்தந்த பணிக்கான நேர்காணல் எந்த தேதியில் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்காணல் பீகாரில் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை http://www.hpclbiofuels.co.in/ இணையதளத்தில் பார்க்கலாம்.