தீயணைப்பு வீரர் பணி

இந்திய விமான நிலைய ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. எனப்படுகிறது.

Update: 2017-10-02 08:10 GMT
ந்திய விமான நிலைய ஆணைய நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 84 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 43 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 4 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் 1-10-2017-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பயர் போன்ற பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது 12 படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். செல்லுபடியாகும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 14-10-2017-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.airportsindia.org.in என்ற இணையதள விண்ணப்பத்தைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்