புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.4.94 கோடியுடன் கார் கடத்தல்; பாதுகாப்பு ஊழியர் கைது
புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.4.94 கோடியுடன் காரை கடத்திய தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வரும் தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியர் மற்றும் டிரைவராக பணியாற்றி வருபவர் நாராயண் பவன்(வயது 50). கடந்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக நாராயண் பவன் மற்றும் ஊழியர்கள் காரில் புறப்பட்டனர். காரில், ரூ.4 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.
ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப ஊழியர்கள் அனைவரும் காரில் இருந்து இறங்கினர். அப்போது, ரூ.4 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரத்துடன் காரை நாராயண் பவன் கடத்திச் சென்றார். இதுகுறித்து புனே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், புனே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடினார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஹாவேரி மாவட்டம் சிக்காம் தாலுகா பங்காபுரா அருகே உள்ள சோதனைச்சாவடியில் பங்காபுரா போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாராயண் பவன் ஓட்டிவந்த காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். சோதனையின்போது, காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், நாராயண் பவனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.4 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரத்துடன் காரை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரையும், அதில் இருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நாராயண் பவனையும் கைது செய்தனர்.
கைதான நாராயண் பவன் ரூ.4 ஆயிரத்தை செலவழித்து இருந்ததால் அவரிடம் இருந்து ரூ.4 கோடியே 94 லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகளாக இருந்தன என்றும், இதுபற்றி மராட்டிய மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், கைதான நாராயண் பவன் மராட்டிய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.