நீதிபதி நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லாததை கண்டித்து 4-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு
நீதிபதி நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லாததை கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் வருகிற 4-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் திருமலைராஜன் கூறினார்.;
தஞ்சாவூர்,
தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் திருமலைராஜன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை வெளிப்படையாக நடக்கும் என்று சுப்ரீம்கோர்ட்டு ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால் அந்த தீர்ப்புக்கு விரோதமாக கர்நாடக ஐகோர்ட்டின் 2-வது நீதிபதியாக உள்ள ஜெயந்தபட்டேல், அலகாபாத் ஐகோர்ட்டிற்கு 3-வது நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் வருகிற 10-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க வேண்டியவர். இவரது இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை எதிர்த்து போராட வழியில்லாமல் நீதிபதி ஜெயந்தபட்டேல் அனுப்பியிருக்கக்கூடிய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்கக்கூடாது. ஏற்கனவே நீதிபதி ஜெயந்தபட்டேலுக்கு ஜூனியர்களாக இருந்த 9 நீதிபதிகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளாகவும், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டிருப்பதில் எந்தவிதமான வெளிப்படை தன்மையும் இல்லை.
நீதிபதிக்கு ஏற்பட்ட அநீதியை கண்டிப்பதோடு, கோர்ட்டின் தனித்தன்மையை காப்பாற்றக்கூடிய கடமை வக்கீல்களுக்கு இருப்பதால் குஜராத், கர்நாடக மாநில வக்கீல்கள் வருகிற 4-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரியிலும் கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட உள்ளோம். 65 ஆயிரம் வக்கீல்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது செயலாளர் சிவ.சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.