பிறந்தநாளையொட்டி சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

தஞ்சாவூர்,
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாளையொட்டி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள சிவாஜிகணேசன் சிலைக்கு சிவாஜி சமூகநல பேரவை சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சதா.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கணேசன், கண்ணன், சுகுமார், பொதுச் செயலாளர்கள் செந்தில், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி விஜயன் வரவேற்றார்.
இதில் மாநகர தலைவர் கிஷோர்குமார், நிர்வாகிகள் வைரக்கண்ணு, விஜயராமலிங்கம், பாலகிருஷ்ணன், முருகன், கல்யாணசுந்தரம், சாந்தன், சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட தலைவர் சதா.வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, சென்னை அடையாறில் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க விருப்பம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்துவிட்டோம். தமிழகஅரசு காழ்ப்புணர்ச்சியோடு இந்த விழாவை கொண்டாடி உள்ளது. சிவாஜிகணேசனின் புகழுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் சிறிய அளவில் விழாவை நடத்தியுள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது நண்பர் சிவாஜிகணேசனுக்கு சென்னை மெரினாவில் சிலையை நிறுவினார். ஆனால் அந்த சிலை இப்போது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜிகணேசன் சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதி கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.