‘ரோஹிங்யா’ முஸ்லிம்களை திருப்பி அனுப்பாமல் அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்
‘ரோஹிங்யா‘ முஸ்லிம்களை திருப்பி அனுப்பாமல் மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி,
திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் முகமது நிஜாம் தலைமை தாங்கினார். செயலாளர் ஹபீபுர் ரகுமான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோரியும் வருகிற டிசம்பர் மாதம் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் முஸ்லிம் லீக் மாநாடு நடத்துவது. மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். ராணுவ தாக்குதலால் வெளியேறி இந்தியாவில் 40 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்களும், தமிழகத்திற்கு 92 பேரும் அகதிகளாக வந்து உள்ளனர். அகதிகளாக அபயம் தேடி வந்துள்ள அவர்களை மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பாமல் உதவிகள் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்வது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடவேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்வது. திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கவேண்டும். மத்திய பஸ் நிலையம் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞர் அணி தலைவர் அமிருதீன், மாணவர் அணி பொதுச்செயலாளர் அன்சர்அலி, தொழிலாளர் அணி தலைவர் சையது ஹக்கீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத ஒரு சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. எனவே தமிழகத்தில் ஒரு நல்ல அரசு அமைய புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் தனது முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது நடந்து வரும் ஆட்சி தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் வருகிற 4-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் தமிழகம் தலை நிமிர்வது மட்டும் இன்றி தமிழகத்தை பிடித்து உள்ள பிணியும் நீங்கும். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் இந்திய பொருளாதாரம் வெகுவாக சரிந்து போய்விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கிறார்கள். இதனால் பஞ்சமும், பட்டினியும் ஏற்பட்டு பல ஆயிரம் மக்கள் மாண்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது, எனவே மத்திய அரசு இதனை போக்க தனது திட்டங்களை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.