குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி சென்னையை சேர்ந்தவர் கைது

குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி சென்னையை சேர்ந்தவர் கைது

Update: 2017-10-01 23:15 GMT
நாமக்கல்,

சென்னை அருகே உள்ள மதுரவாயல் மதுர கார்டனை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 48). இவர் மீது திருச்செங்கோடு அருகே உள்ள கல்வி நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் தங்களது கல்வி நிறுவனத்தை மேம்படுத்த குறைந்த வட்டியில் ரூ.300 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, தியாகராஜன் ரூ.3 கோடி மோசடி செய்து விட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது, பெங்களூருவில் ஏஜென்சி நடத்தி வந்த தியாகராஜன் அந்த கல்வி நிறுவனத்தினரிடம் புதுடெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து குறைந்த வட்டிக்கு ரூ.300 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடியை கமிஷனாக பெற்று மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தியாகராஜனை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தியாகராஜன் மீது சென்னை மற்றும் பெங்களூருவிலும் மோசடி வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்