கடத்தப்பட்டவர் புதருக்குள் பிணமாக மீட்பு: தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது
நிலக்கோட்டை அருகே கடத்தப்பட்டவர் புதருக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியில் இருந்து மதுரை மாவட்டம் குருவித்துறை செல்லும் சாலையோர புதரில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை நிலக்கோட்டை போலீசார் கைப்பற்றி அவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.
அவருடைய கழுத்தில் காயங்கள் இருந்ததால், கொலை செய்யப்பட்டு புதரில் யாரோ வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவரின் பெயர் ஜாகுபார் அலி (52) என்றும், திருவாரூர் அருகே அரியன்வாயலை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இவர் மீது பண மோசடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதன்பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை ஒரு கும்பல் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த ராஜா (48), வேல்முருகன் (35), குகன் (49), ராஜசேகர் (38), அலங்காநல்லூரை சேர்ந்த சிவக்குமார் (29), திண்டுக்கல்லை அடுத்த காப்பியப்பட்டியை சேர்ந்த வரதராஜன் (40), சீலப்பாடியை சேர்ந்த ஜெயக்குமார் (31) ஆகிய 7 பேர் ஜாகுபார் அலியை கடத்தியது தெரியவந்தது.
அதாவது ராஜசேகர், குகன் ஆகியோர் சேர்ந்து ஜாகுபார் அலியின் மகன் அக்பர் அலியிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தர சொல்லி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். பின்னர் வேலை வாங்கி தராமல் அக்பர் அலி தலைமறைவாகி விட்டதாக தெரிகி றது. பணம் திருப்பி கிடைக்காததால், ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜா, வேல்முருகன், சிவக்குமார், வரதராஜன், ஜெயக்குமார் ஆகியோருடன் சேர்ந்து திண்டுக்கல்லுக்கு வந்த ஜாகுபார் அலியை ஒரு காரில் கடத்தியுள்ளனர்.
பின்பு அவரை விளாங்குடியை சேர்ந்த திருப்பதி என்பவரின் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, அங்கு இருந்த சேலையில் தூக்குப்போட்டு ஜாகுபார் அலி பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஜாகுபார் அலியின் உடலை ஒரு காரில் ஏற்றி நிலக்கோட்டையை அடுத்த எஸ்.மேட்டுப்பட்டி வந்துள்ளனர்.
பின்னர் உடலை சாலையோரத்தில் உள்ள புதருக்குள் வீசி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 7 பேர் மீதும் ஜாகுபார் அலியை கடத்தியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.