விலங்குகள் பரிமாற்ற முறையில் இமாலய கருங்கரடி ஜோடி வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது
மத்திய அரசின் உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விலங்குகள் பரிமாற்ற முறையில் இமாலய கருங்கரடி ஜோடி வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
வண்டலூர்,
மத்திய அரசின் உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விலங்குகள் பரிமாற்ற முறையின் கீழ் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், நந்தன்கானன் பூங்காவில் இருந்து கடந்த 23–ந் தேதி வண்டலூர் பூங்காவுக்கு ஒரு ஜோடி இமாலய கருங்கரடி, ஒரு ஜோடி நீர் உடும்பு, 5 ஜோடி அரிவாள் மூக்கன், 2 ஜோடி நத்தைக்குத்தி நாரை, ஒரு சயாம் என்ற ஆண் முதலை ஆகியவை வண்டலூர் பூங்காவுக்கு வந்தன.
இதற்கு பதில் வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி நீலகிரி கருங்குரங்கு, 2 ஜோடி வெள்ளை மயில், 5 ஜோடி வண்ண நாரை, ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு போன்றவற்றை கடந்த 25–ந் தேதி நந்தன்கானன் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
ஒடிசாவில் இருந்து கொண்டு வரப்பட்ட விலங்குகள், பறவைகள் அனைத்தும் தற்போது பார்வையாளர்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.