தோவாளையில் சைக்கிளில் சென்ற மொழிப்போர் தியாகி கார் மோதி பலி

தோவாளையில் சைக்கிளில் சென்ற மொழிப்போர் தியாகி கார் மோதி பலியானார்.

Update: 2017-10-01 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

தோவாளை தேவர்நகரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 75), மொழிப்போர் தியாகி. சம்பவத்தன்று காலையில் பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் மெயின் ரோட்டில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு சென்றார்.

பின்னர், பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த கார் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமையா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அதே காரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ராமையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார், கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ராமையாவுக்கு கிருஷ்ணம்மா என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்