தனுஷ்கோடி நடுக்கடலில் கடல் நீரோட்ட மாற்றத்தால் தெளிவாக தெரியும் மணல் திட்டுகள்

கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி நடுக்கடலில் மணல் திட்டுகள் தெளிவாக தெரிவதால் ஆச்சர்யத்துடன் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர்.

Update: 2017-10-01 23:15 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் பகுதிகளில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் இந்திய எல்லைபகுதி 5–வது மணல் திட்டுடன் முடிவடைந்து விடுகிறது. தமிழக கடல் பகுதிகளிலேயே கடல் சீற்றம், கடல் நீரோட்டம் அதிகமாக உள்ள கடல் பகுதி தனுஷ்கோடி.

தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் பகல் முழுவதும் மணல் திட்டுகள் தெரிவதும் இரவு நேரங்களில் கடல் நீர் சூழ்ந்து காணப்படுவது வழக்கம். வழக்கமாக பகல் நேரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்க்கும்போது நடுக்கடலில் ஒரே ஒரு மணல் திட்டு மட்டுமே தெரிந்து வந்தது.

இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகள் தெளிவாக தெரிந்து வருகின்றன. கடந்த 1 வாரமாக 4 மணல் திட்டுகள் வரை தெளிவாக காணமுடிகிறது. இதையடுத்து தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரையில் நின்ற படி நடுக் கடலில் வெளியே தெளிவாக தெரியும் மணல் திட்டுகளை மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்