அபார ருசி தரும் அப்பளம்

பெரிய இலைபோட்டு பல வகை கூட்டுகளை பரிமாறினாலும், அதில் மொறு மொறுப்பான அப்பளம் ஒன்றை தூக்கிப்போட்டால்தான் அந்த உணவு முழுமை பெறுகிறது.

Update: 2017-10-01 13:00 GMT
பெரிய இலைபோட்டு பல வகை கூட்டுகளை பரிமாறினாலும், அதில் மொறு மொறுப்பான அப்பளம் ஒன்றை தூக்கிப்போட்டால்தான் அந்த உணவு முழுமை பெறுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் இதற்கு வெவ்வேறு பெயர்கள். அதுபோல் தயாரிப்பு முறையிலும் சுவையிலும்கூட நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ருசி நிறைந்த அப்பள தகவல்கள்:

உணவில் மட்டுமல்ல! இலக்கியம், கவிதை, நாட்டுப்புறப் பாடல்களிலும் அப்பளம் இடம் பிடித்திருக்கிறது. எல்லாவற்றிலும் அதன் ருசி பெருமையாக பேசப்படுகிறது. பீகார்தான் இதன் பூர்வீக மாநிலம் என்று சொல்கிறார்கள். கர்நாடக மாநிலம்தான் என்று சொல்பவர்களும் உண்டு. திபெத்தியர்களும் இதற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். கேரளா மற்றும் குமரி மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் இதற்கு பப்படம் என்று பெயர். கர்நாடகத்தில் ஹப்பளமாம்!

1932-ம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய உணவுகள் கண்காட்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட அங்குள்ள மேயர், ‘மது அருந்தும்போது உடன் சாப்பிட சிறந்த உணவாக அப்பளம் இருக் கிறது என்று ‘புகழாரம்’ சூட்டியுள்ளார். இப்போதும் மது பிரியர்கள் வயிற்றை கெடுக்காமல் இருக்க, அப்பளத்தை மென்று மதுவை குடிக்கிறார்கள்.

சுட்ட அப்பளமும், டீயும் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் முன்பு கேரளாவில் இருந்திருக்கிறது. பிரியாணியோடும், புட்டு மற்றும் உப்புமாவோடும் அப்பளம் பரிமாறும் வழக்கம் உள்ளது.

அப்பளத்தை பல விதமாக பொரிக்கலாம். நிறைய எண்ணெய் ஊற்றி முழுக்க மூழ்கவைத்து பொரிப்பது, சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுப்பது போன்று பொரிப்பது, தீயில் சுட்டு எடுப்பது இப்படி பல விதங்களில் இதை தயார் செய்து சுவைக்கலாம்.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் குடிசை தொழிலாக அப்பளம் தயாரிக்கிறார்கள். பிராண்ட் அப் பளங்களும் இங்கு தயார் செய்யப்பட்டு உலக அளவில் விற்பனையாகிறது. கேரளாவில் குருவாயூர் பகுதியில் தயாராகும் அப்பளமும் பிரபலமாகிக்கொண்டிருக் கிறது.

மக்கள் உடனடி தேவைக்கு ‘அப்பள துவையல்’ தயார் செய்கிறார்கள். சில அப்பளங்களை பொரித்துக்கொள்ள வேண்டும். அதை தூள்போல் ஆக்கி சிறிதளவு மிளகாய்த் தூள், உப்பு சேருங்கள். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்தால் போதும், அப்படியே சுவைக்கலாம்.

அப்பளத்தை வித்தியாசமாக எப்படி எல்லாம் ருசிக்கலாம் என்று சிந்தித்த தாய்மார்கள், அதில் குழம்பும் தயாரிக்கிறார் கள். ஒன்றரை தேக்கரண்டி மிளகாய்த் தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள் இரண்டையும் கலந்து சூடாக்குங்கள். அதில் ஒரு கப் தேங்காய் துருவல் போட்டு கிளறுங்கள். நாலைந்து சிறிய வெங்காயம் சேர்த்து அதை அரையுங்கள். தேவைக்கு புளி கரைசல் விட்டு அடுப்பில் வைத்து, கொதிக்கவிடுங்கள். தேவைக்கு அப் பளம் எடுத்து, டைமன்ட் வடிவத்தில் கட் செய்து பொரிக்கவும். அதை கொதிக்கும் குழம்பில் போட்டு இறக்குங்கள். கடுகு, வெந்தயம், சிறிய வெங்காயம் தாளித்து அதில் சேருங்கள். சுவையான குழம்பு ரெடி.

அப்பளத்தை சிறிதாக நறுக்குங்கள். சிறிய வெங்காயத்தையும், காய்ந்த மிளகாயையும் அரைத்து அதில் சேருங்கள். பின்பு மொத்தமாக வறுத்தால் சுவையான கூட்டு தயார்.

அப்பளம் எல்லோரையும் கவரும் எளிய உணவு! 

மேலும் செய்திகள்