கல்யாண் அருகே ஓட்டல் அறையில் காதல் ஜோடி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
கல்யாண் அருகே உள்ள ஓட்டல் அறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை,
மும்பை பாண்டுப் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் சனன் (வயது30). இவர் சம்பவத்தன்று தனது காதலியுடன் கல்யாண் அருகே சாகட் பகுதிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து காதலியுடன் தங்கி இருந்தார். இந்தநிலையில் காதல் ஜோடி தங்கி இருந்த அறையில் இருந்து ரத்தம் வெளிவந்ததை பார்த்து ஓட்டல் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஓட்டல் மேலாளர் மாற்று சாவி மூலம் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அறையில் ரோஷன் சனன் மற்றும் அவரது காதலி இரண்டு பேரும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் சம்பவம் குறித்து கடக்பாடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ருக்மணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப்பின் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக கே.இ.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.