குமரி மாவட்ட கோவில்களில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி

விஜயதசமியையொட்டி நேற்று குமரி மாவட்ட கோவில்களில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2017-09-30 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் விஜயதசமி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படுகிற ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக பெற்றோர் தங்களது குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து சென்றனர். இதனால் கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

சில கோவில்களில் குழந்தைகளின் நாவில் பூசாரிகள் ‘ஓம்‘ என்று எழுதினர். அதைத் தொடர்ந்து குழந்தைகளின் கையை பிடித்து அரிசியில் ‘அ‘ என்று எழுத வைத்தனர்.

மண்டைக்காடு கோவில்

ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நாகர்கோவில் நாகராஜா கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவில், அய்யப்பன் கோவில், வடசேரி காசிவிஸ்வநாதர் ஆலயம் மற்றும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பாக நடந்தது.

மேலும் செய்திகள்