கூடங்குளம் அணுமின் நிலைய என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை, பணம் கொள்ளை
பூதப்பாண்டி அருகே கூடங்குளம் அணுமின் நிலைய என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் ஜீவா நகரை சேர்ந்தவர் எழில் அரசன் (வயது 37). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சவுமியா (30), நாகர்கோவிலில் ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் எழில் அரசனின் தாயார் மகேஷ்வரியும் தங்கியுள்ளார்.
மகேஷ்வரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுரையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். தாயாரை அழைத்து வருவதற்காக எழில் அரசன் கடந்த 28–ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரைக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலையில் இவர்களது வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு இருப்பவர் கீழே வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுரையில் இருந்த எழில் அரசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் வெளியே வீசப்பட்டிருந்தன. மேலும், பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து, படுக்கை அறையில் இருந்த பீரோவை கம்பியால் உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து வீராணமங்கலம் கால்வாய் கரையோரமாக சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்.