எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சேலம்,
சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை அரசு சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்கி பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சேலம் மாவட்டத்தில் ரூ.23 கோடியே 95 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இதுவரை 15 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவிலும் குட்டிக்கதை கூறி வருவதற்கு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்க்கட்சியினர் குட்டிக்கதை பற்றி கூர்மையாக கவனித்து வருவதற்கு மிக்க நன்றி. மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குட்டிக்கதை கூறி வருகிறேன். குறை சொல்வது அவர்களது பணி. மக்கள் பணி மட்டுமே நமது வேலை. சாதாரண மக்களின் மனதில் இன்னும் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டில் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் மிகவும் சீரும் சிறப்புமாக நாம் கொண்டாடி வருகின்றோம். அந்தந்த மாவட்டத்து மக்கள் பெருந்திரளாக அலைகடலென விழாவில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தி வணங்கிவிட்டு செல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத மாற்றுக்கட்சியினர் இந்த விழாவை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாத விஷயத்தை தேடி, தேடி கண்டுபிடித்து புதிய, புதிய குற்றச்சாட்டுகளை உருவாக்கி மக்களிடையே பரப்பி வருகிறார்கள். அவர்களுடைய கெட்ட நோக்கம் ஒரு காலமும் நிறைவேறாது.
மேலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகிறார்கள். தமிழக மக்களின் நலன்களுக்கு தேவையான நிதியை பெற வேண்டியதுள்ளது. எனவே, இணக்கமாக உள்ளோம். ஏன், மாநிலத்தை ஆண்ட பல முக்கிய தலைவர்கள் மத்திய அரசுக்கு இணக்கமாகத்தான் இருந்து வந்துள்ளனர்.
நாங்கள் மத்திய அரசோடு சுமுகமான உறவு வைத்துக் கொண்டிருப்பதால்தான், தமிழ்நாட்டிற்கு 10 ஸ்மார்ட் சிட்டிகள், மக்களுக்கு குறைந்த செலவில் தரமான டிஜிட்டல் ஒளிபரப்பு, வறட்சி நிவாரணம் மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 79 ஆயிரத்து 340 வீடுகள், தமிழ்நாட்டில் ஜப்பான் தொழில் நகரம் அமைத்தல் உள்பட மக்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பு திட்டங்கள் பெற முடிந்தது. மேலும், நகரங்களை இணைக்கும் விமான சேவைக்காக, மத்திய அரசு அறிவித்துள்ள உதான் திட்டத்தில், சேலம், ஓசூர், நெய்வேலி ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 7 மாதங்களில் மக்கள் நல திட்டங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இதுவரை 3,563 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இப்படி நல்லபல திட்டங்களை நிறைவேற்றி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த ஆட்சியை அகற்ற முனைகிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. 1996-ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகள் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமாவது கொண்டு வந்தார்களா? என்றால் இல்லை.காவிரி நதிநீர் பிரச்சினையில் விவசாயிகளின் நலன் காக்க, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
தி.மு.க. ஆட்சியில் 100-க்கு 22 சதவீதம் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை, இன்று 100-க்கு 44.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றில் 10 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, சேலம் கோட்டைக்குள் எவராலும் நுழைய முடியாத வகையில் சாதனை படைத்துள்ளோம். ஜெயலலிதாவின் விசுவாசமிக்க மக்களை கொண்டது இந்த கூட்டம். மாநில மாநாடுபோல இங்கு மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தெய்வங்களின் ஆசி இருக்கும் வரை எவராலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது. சேலம் மாநகராட்சி அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, சரோஜா, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பாலகிருஷ்ணரெட்டி, ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.