7-ந்தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைச்சர் ஆய்வு
தர்மபுரியில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு செய்தார்.
தர்மபுரி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகிற 7-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி கல்லூரி மைதானத்தில் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. விழாவையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு வந்து, செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் ஆய்வு செய்தார். விழா நடைபெறும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தை சுற்றி உள்ள வழித்தடங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து, செல்ல வாகன வசதிகள் குறித்து கலெக்டர் விவேகானந்தனிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.