திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-09-30 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ஏரிக்கரை அருகே வசித்து வரும் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அவர்கள் கூறியதாவது:–

நாங்கள் திருநின்றவூர் ஏரிக்கரையில் காலம் காலமாக வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து ஏரிக்கரையை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளீர்கள். அதனால் நீங்கள் அனைவரும் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறி அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கினார்கள்.

எங்களது வீடுகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களில் சிலர் இது சம்பந்தமான புகார்மனுவை கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்