மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே, மத்திய, மாநில அரசு எஸ்.சி.–எஸ்.டி. ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே, மத்திய, மாநில அரசு எஸ்.சி.–எஸ்.டி. ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதில் அரசு அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அம்பேத்கர் படம் வைக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைத்து வெளியிட்ட அரசாணையை திரும்ப பெறவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.