மரத்தில் கார் மோதல்: சென்னையைச் சேர்ந்த அக்காள், தம்பி பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த அக்காள், தம்பி பரிதாபமாக பலியாகினர்.

Update: 2017-09-30 21:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 53). இவர் ஓசூரில் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(48).
இவர்கள் ஓசூரில் இருந்து காரில் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காரை சாந்தியின் தம்பி நாகேந்திரன்(45) ஓட்டி வந்தார்.

கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கம்பத்துபட்டி விலக்கு பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

மேலும் செய்திகள்