கண்கவர் அலங்கார வண்டிகள் அணிவகுப்புடன் மைசூரு தசரா ஊர்வலம்
சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசராவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மைசூரு,
இந்த நிலையில் 407-வது தசரா விழா இந்த ஆண்டு கடந்த 21-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தசரா விழாவை முதல்-மந்திரி சித்தராமையா முன்னிலையில் கன்னட கவிஞர் நிசார் அகமது சாமுண்டீசுவரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலமாக தொடங்கி வைத்தார்.
அன்று முதல் கர்நாடகத்தின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் வீர விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம், விவசாயிகள் தசரா, மகளிர் தசரா, இளைஞர் தசரா, உணவு மேளா, மலர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல தசரா விழாவை முன்னிட்டு மைசூரு அரண் மனையில் மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ராஜ உடை அணிந்து தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தி வருகிறார்.
தசரா விழாவின் 9-வது நாளான இன்று(வெள்ளிக் கிழமை) மைசூரு அரண்மனையில் மன்னர் யதுவீர் தலைமையில் அரண்மனையின் பாரம்பரிய முறைப்படி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் அரண்மனையில் வளர்க்கப்பட்டு வரும் யானைகள், ஒட்டகங்கள், மாடுகள் ஆகியவற்றுக்கும், மன்னரின் போர்க்கருவிகள், ரதங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னிமரத்திற்கு மன்னர் யதுவீர் விசேஷபூஜை செய்து வழிபடுகிறார். பின்னர் மாலை 6 மணி அளவில் அரண்மனையில் உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்து யதுவீர் தனியார் தார்பார் நடத்துகிறார். இதில் மகாராணி பிரமோதா தேவி, யதுவீரின் மனைவி திரிஷிகா குமாரி உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி காலை முதல் இரவு வரை பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தசரா ஊர்வலம் என்னும் ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு அரண்மனை வளாகத்தில் ‘முஸ்டி காளகா’ என்னும் மல்யுத்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் மொட்டை அடித்துக் கொண்ட 2 வீரர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் மோதுவார்கள். இதில் யாராவது ஒரு வீரரின் தலையில் ரத்தம் வந்தவுடன் போட்டி நிறுத்தப்படும். அதன்பிறகு விஜயதசமி விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும்.
மதியம் அரண்மனையில் உள்ள கோட்டை ஆஞ்சநேய சுவாமி கோவில் வளாகத்தில் இருக்கும் உயரமான நந்தி தூணுக்கு பகல் 12.15 மணி அளவில் முதல்-மந்திரி சித்தராமையா சிறப்பு பூஜை நடத்துகிறார். அதையடுத்து ஜம்பு சவாரி ஊர்வல ஏற்பாடுகள் தொடங்குகிறது. மாலை 4.15 மணி அளவில் சாமுண்டீசுவரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அர்ஜூனா யானை, அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகே வந்து நிற்கும். அந்த மேடையில் நின்றபடி முதல்-மந்திரி சித்தராமையா தங்க அம்பாரியில் எழுந்தருளி இருக்கும் சாமுண்டீசுவரி அம்மன் மீது மலர் தூவி மரியாதை செய்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மன்னர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி, மந்திரி மகாதேவப்பா, கலெக்டர் ரன்தீப் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
ஜம்பு சவாரி ஊர்வலத்தில் போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார், பேண்டு வாத்திய குழுவினர், கலைக்குழுவினர், பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் சாரணர்-சாரணியர்கள் அணிவகுத்து செல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய வாகனங்களும், விவசாயம் மற்றும் விவசாய திட்டங்கள் தொடர்பான ஊர்திகளும், கர்நாடகத்தின் கலை, கலாசாரம், பண்பாட்டை விளக்கும் அலங்கார வண்டிகளும் இந்த கண்கவர் அணிவகுப்பில் பங்கேற்கும். டெல்லியில் நடக்கும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின ஊர்வலத்தில் நடக்கும் அணிவகுப்பு போன்று ராணுவம் மற்றும் விமானப்படையை இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், மைசூருவில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், விமானப்படை மற்றும் ராணுவத்தினர் எந்த அணிவகுப்பு ஒத்திகையும் நடத்த முடியாமல் உள்ளனர். இதனால் தசரா ஊர்வலத்தில் அவர்கள் கலந்துகொள்வது சந்தேகமாக உள்ளது.
750 கிலோ தங்க அம்பாரியை சுமந்தப்படி அர்ஜூனா யானை கம்பீரமாக நடந்து செல்லும். அதனை தொடர்ந்து மற்ற யானைகள் பின்தொடர்ந்து செல்லும். அதன்பின்பு அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடைபெறும். ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபத்தை சென்றடையும். அரண்மனை முதல் பன்னிமண்டபம் வரை இருபுறமும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குவிந்து நின்று ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு களிப்பார்கள். ஊர்வலம் பன்னிமண்டபத்தை அடைந்ததும் அர்ஜூனா யானை மீது இருந்த தங்க அம்பாரி கீழே இறக்கி வைக்கப்படும். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க அம்பாரி மீண்டும் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும்.
இதையடுத்து பன்னிமண்டபத்தில் தீப்பந்து விளையாட்டு, லேசர் ‘லைட் ஷோ’ ஆகியவை நடத்தப்படுகிறது. இதனை கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா தொடங்கி வைக்கிறார். இதில், பல்வேறு தீப்பந்த சாகசங்களை வீரர்கள் செய்து காட்டுகிறார்கள். அதன்பிறகு கண்களுக்கு விருந்தளிக்கும் லேசர் லைட் ஷோ நடைபெறும். மேலும் போலீஸ்காரர்களின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.
இறுதியாக ஊர்வலத்தில் கலந்துகொண்ட போலீஸ் குழுவினரின் அணிவகுப்பு உள்பட அனைத்து குழுவினரின் அணிவகுப்புகளும் நடக்கிறது. இதனை கவர்னர் வஜூபாய் வாலா திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடுகிறார். அத்துடன் இந்த ஆண்டு தசரா விழா நிறைவு பெறுகிறது. இறுதியில் விண்ணை அதிரவைக்கும் வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, கலெக்டர் ரன்தீப் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். தசரா திருவிழாவையொட்டி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வரர் ராவ், போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சன்னன்னவர் ஆகியோர் தலைமையில் மைசூரு நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், மைசூரு அரண்மனை பன்னிமண்டபம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கி முடியும் வரை அரண்மனை முதல் பன்னிமண்டபம் வரையுள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.
தசரா திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தசரா நிகழ்ச்சிகளை கண்டு களிக்க மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் மைசூருவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.