கோவில்பட்டியில் ஆவணங்கள் சரியாக இல்லாத 4 ஆட்டோக்கள் பறிமுதல் மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை

கோவில்பட்டியில் ஆவணங்கள் சரியாக இல்லாத 4 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.

Update: 2017-09-20 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் ஆவணங்கள் சரியாக இல்லாத 4 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.

வாகன சோதனை

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி மன்னர்மன்னன் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், கோவில்பட்டி கடலையூர் ரோட்டியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பயணிகள் ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட ஆட்கள் எண்ணிக்கையை விட, அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 4 ஆட்டோக்களை நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது ஆவணங்கள் சரியாக இல்லாததால் அந்த 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாணவர்களுக்கு அறிவுரை

இந்த சோதனையில் போது பள்ளி மாணவிகள் 3 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து, 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ– மாணவிகளை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க வேண்டாம். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவது சட்டபடி குற்றம். 18 வயதிற்குள் இருக்கும் பள்ளிக்கு செல்லும் மாணவ– மாணவிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை கொடுக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கி மாணவிகளை அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்