கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3½ கோடி பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3½ கோடி பொருட்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருட்டு பொருட்கள் திருடர்கள், கொள்ளை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்கள், நகைகளை கோர்ட்டு அனுமதி அளித்த பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்

Update: 2017-09-14 22:57 GMT

மும்பை,

கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3½ கோடி பொருட்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

திருட்டு பொருட்கள்

திருடர்கள், கொள்ளை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்கள், நகைகளை கோர்ட்டு அனுமதி அளித்த பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். இவ்வாறு கோர்ட்டு ஒப்புதல் அளித்த திருட்டு பொருட்கள் மற்றும் தங்க, வைர நகைகளை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோரேகாவ் முதல் தகிசர் வரை மேற்கு புறநகர் பகுதி காவல் நிலையங்களால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ரூ.3½ கோடி பொருட்கள்

மூதாட்டிகள் உள்பட 16 பெண்களின் தாலிச்சங்கிலிகள் உள்பட ரூ.3½ கோடி மதிப்பிலான திருட்டு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், போரிவிலியில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.52½ லட்சம் செல்போன்கள், நகைக்கடை ஊழியரால் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1¾ கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கநகைகளும் அடங்கும்.

கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்களை கோர்ட்டில் அனுமதி பெற்று முடிந்தவரை சீக்கிரமாக பொதுமக்களிடம் ஒப்படைத்து வருகிறோம் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்