பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டம் குறித்த கருத்தரங்கம்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் ஈரோட்டில் நடைபெற்றது.

Update: 2017-09-14 22:01 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் கோவை அக்கறை அறக்கட்டளை சார்பில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் ஈரோட்டில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார் மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி மரகதம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் கலைமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கறை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மெல்வின் வரவேற்று பேசினார்.

கருத்தரங்கில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சுரேசும், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டம்-2013 குறித்து வக்கீல் ஸ்ரீனிவாசராகவனும், இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்து குழந்தைகள் நல குழுமத்தலைவர் தாஜூதீனும், தமிழக அரசின் விடுதிகளுக்கான சட்டம் குறித்து ரீடு நிறுவனத்தின் இயக்குனர் கருப்புசாமியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து ரீடு திட்ட மேலாளர் மகேஸ்வரனும் பேசினார்கள். இதில் ஈரோடு சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.கமலவேணி மற்றும் பள்ளிக்கல்வித்துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், தேசிய குழந்தை தொழில் ஒழிப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்