திருப்பூர், காணூர்புதூரில் நாளை மின்தடை
திருப்பூர்,காணூர் புதூரில் நாளை (சனிக்கிழமை) மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்,
திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஜி.சிவசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர்
திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே குமார்நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையாகாலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜிநகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன்நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்நிலையம், லட்சுமி நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சந்தைப்பேட்டை
இதுபோல் சந்தைபேட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அரண்மனைப் புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கருப்ப கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளிரோடு, யூனியன் மில்ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காணூர்புதூர்
இதேபோல் காணூர்புதூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும் உயர் அழுத்த மின்பாதையில் டி.சி. உயர்கோபுர பணிகள் நாளை(சனிக் கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்காளிபாளையம், நரியம்பள்ளி, கே.ஜி.புதூர் ஒரு பகுதி, கஞ்சபள்ளி ஒருபகுதி மற்றும் பில்டன் யூனிட்-1, பில்டன் யூனிட்-2 ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக் காது.
இந்த தகவலை அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் ம.தசரதன் தெரிவித்துள்ளார்.