உடுமலை புத்தக திருவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் 17-ந்தேதி நடக்கிறது

உடுமலை புத்தக திருவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

Update: 2017-09-14 21:47 GMT
உடுமலை,

உடுமலை புத்தகாலயம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் 6-வது உடுமலை புத்தக திருவிழா வருகிற 29-ந்தேதி முதல் அடுத்தமாதம் (அக்டோபர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. உடுமலை-தளி சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த புத்தக திருவிழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 17-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘மீன்கள்’ அல்லது ‘வண்ணத்து பூச்சி’ என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘படகு போட்டி’ அல்லது ‘இயற்கையின் அழகு’ என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மாவீரன் பகத்சிங் அல்லது ‘கர்மவீரர் காமராஜர்’ என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடக்கிறது.

கட்டுரை, பேச்சுப்போட்டி

6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘நான் விரும்பும் புத்தகம்’ என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘கானகம் காப்போம்’ என்ற தலைப்பிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ‘அறிவியலும், மனித வாழ்க்கையும்’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ‘புத்தகம் என்ன செய்யும்’ என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடக்கிறது.

இதுபோல் 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ‘சுதந்திர போராட்ட வீரர்’ என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மங்காத தமிழென்று’ என்ற தலைப்பிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ‘நூல்களும், சமுதாயமும்’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ‘ஆதிக்க போரால் அதிரும் உலகம்’ என்ற தலைப்பிலும் பேச்சுபோட்டி நடக்கிறது. இந்த தகவலை உடுமலை புத்தகாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்