உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை

வத்தலக்குண்டு உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை

Update: 2017-09-14 22:45 GMT
வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு பகுதியில் செயல்படும் தொடக்க பள்ளிகளில் 204 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். இதில் 142 ஆசிரியர்கள் மட்டும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். மீதம் உள்ள 62 பேர் பகல் 12 மணிக்கு பள்ளியை திறக்கின்றனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு மூடிவிட்டு சென்றுவிடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் வத்தலக்குண்டு வட்டார உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டார உதவி கல்வி அலுவலக அலுவலர்கள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்