கடலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கடலூரில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்திருந்த போதிலும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டம் தொடருகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறவர்கள் கடந்த 11-ந்தேதி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தையும், 12-ந்தேதி மறியல் போராட்டத்தையும் நடத்தினார்கள்.
நேற்று முன்தினம் முதல் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்ட பந்தலுக்கு எதிரே உள்ள ஆபீசர்ஸ் கிளப் வளாகத்தில் மதிய உணவு தயாரித்து சாப்பிட்டனர். மதியத்துக்கு பின்னர் சங்க நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.
இந்த போராட்டத்துக்கு அனுமதியில்லாததால் போராட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே போலீஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தன. என்றாலும் போராட்டக்காரர்களை போலீசார் நேற்று மாலை வரை கைது செய்யவில்லை.
இது பற்றி அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் காசிநாதன் கூறுகையில், நாங்கள் இரவு முழுவதும் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்திலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு பள்ளிக்கூடங்களிலும் வகுப்புகள் சரியாக நடைபெற வில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று கிராம நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. வழக்கமாக வேலை நிறுத்தம் பற்றிய புள்ளி விவரங்கள் 11 மணி அளவிலேயே கலெக்டர் அலுவலகத்துக் கிடைத்து விடும். ஆனால் கிராம நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் குதித்ததால் புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.