கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தஞ்சாவூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ஒழித்துவிட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக தஞ்சை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்துவிடாமல் இருக்க நுழைவு வாயிலின் ஒரு கதவை போலீசார் பூட்டினர். மற்றொரு கதவு வழியாக உள்ளே சென்றவர்களையும் தீவிர விசாரணை நடத்திய பின்னரே அனுமதித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள்ளேயும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் என மொத்தம் 7,046 பேர் பணிக்கு செல்லவில்லை. மற்றவர்கள் பணிக்கு சென்றாலும் முழுமையாக பணி எதுவும் நடைபெறவில்லை.