கோவில்பட்டியில் பாத்திர வியாபாரியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
கோவில்பட்டியில் பாத்திர வியாபாரியை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி,
கோவில்பட்டியில் பாத்திர வியாபாரியை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
பாத்திர வியாபாரிதுத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 35). இவர் கேரளாவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய நண்பர் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்த முருகன் என்ற கட்டமுருகன் (42). கடந்த 14–5–2015 அன்று முருகன் கடலையூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த, கட்டிடத்துக்கு கம்பி கட்டும் தொழிலாளியான வள்ளுவர்நகர் 2–வது தெருவை சேர்ந்த சின்னத்துரை (28) என்பவர் முருகனிடம் தகராறு செய்தார்.
வெட்டிக் கொலைஇதுகுறித்து அறிந்த சுந்தரமூர்த்தி, முருகனை அழைத்துக் கொண்டு சின்னத்துரை வீட்டுக்கு சென்று விசாரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக சுந்தரமூர்த்தி, முருகனை வெட்டினார். இதில் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முருகன் படுகாயம் அடைந்தார்.
ஆயுள் தண்டனைஇதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2–வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட சின்னத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஏ.வி.முத்து ஆஜர் ஆனார்.