திருவள்ளூரில் பொதுமக்களுக்கு இடையூறு; 2 பேர் கைது

திருவள்ளூரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-14 21:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் டவுன் சப்–இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் வீரண்ணன் தெருவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது அங்கு நெல்லை மாவட்டம் நாங்கு  நரியை அடுத்த பட்டயம் கிராமத்தை சேர்ந்த முத்து
கிருஷ்ணன் (வயது 30), திருவள்ளூர் வீரண்ணன் தெருவை சேர்ந்த காஜாமொய்தீன்(48) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த பொதுமக்களை தகாத வார்த்தையால் பேசி இடையூறு செய்து கொண்டிருந்தனர்.

கைது

 மேலும் அந்த வழியாக வாகனங்கள் வந்தால் அவற்றை அடித்து நொறுக்குவதாக கூறி கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்