நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திருவாரூரில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-09-13 23:00 GMT
திருவாரூர்,

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகள் அறிவித்து இருந்தது.

அதன்படி திருவாரூர் பஸ் நிலையம் அருகே அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி), காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், தி.க. மாவட்ட தலைவர் கோபால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஜ்லுல்ஹக், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகி ஜலாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

தமிழக மாணவர்களின் கல்வியை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்