நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தி.மு.க.-அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் தி.மு.க.-அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
மருத்துவ படிப்புக்கு மாணவ-மாணவிகளை தேர்வு செய்ய நீட் தேர்வை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வு முறையால் கிராமப்புற மாணவ-மாணவிகளின் டாக்டராகும் கனவுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாணவர்களின் மன உணர்வை ஆதரிக்கும் வகையில் மாணவி அனிதா உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை பனகல் கட்டிடம் அருகே தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்வேறு கோஷங்கள்
இதற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பழனிமாணிக்கம், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம் வரவேற்றார்.
இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், திட்டக்குழு உறுப்பினர் இறைவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், லோகநாதன், ராஜேந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் பாதுசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மேலிட நெறியாளர் கிட்டு, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முடிவில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது லேசாக மழை தூறியது. அதையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.