வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைத்து மணல் விற்பனை 15 லாரிகள், 2 பொக்லைன்கள் பறிமுதல்
தொட்டியம் அருகே வாழைத்தோட்டத்தில் பதுக்கி வைத்து மணல் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக 15 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீனிவாசநல்லூர் பதனித்தோப்பு பகுதியில் உள்ள காவிரிக்கரையோரத்தில் ஒரு வாழைத்தோட்டம் உள்ளது. காவிரி ஆற்றில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளி வந்து, வாழைத்தோட்டத்தில் அதனை பதுக்கிவைத்து மணல் விற்பனை செய்யப்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமார், தொட்டியம் தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்கு ஆற்றுமணல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதனை யாருக்கும் தெரியாத வகையில் தென்னங்கீற்றுகளால் மறைத்து தடுப்பு கட்டியிருந்தனர்.
மேலும் அந்த மணலை அள்ளி செல்ல 15 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனையடுத்து அவைகளை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த மணல் லாரிகளின் டிரைவர்கள் லாரியின் சாவிகளை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மெக்கானிக் உதவியுடன் மாற்று டிரைவர்களை கொண்டு 15 லாரிகளையும், 2 பொக்லைன் எந்திரங்களையும் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுத்தனமாக மணலை பதுக்கி வைத்து அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்காக வாழைத்தோட்டத்தின் பட்டா உரிமையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தர விட்டார்.