காத்திருப்பு போராட்டம் நடத்த அரசு ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம்
திருச்சியில் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி நின்றதால், முன்னதாகவே போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கேட் மற்றும் பின்பக்க கேட் ஆகியவற்றை இழுத்து மூடிவிட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தள்ளு முள்ளு
இதனால் போலீசார் வைத்து இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தள்ளிக்கொண்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது. அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் கேட்டில் ஏறி குதித்தனர். அவர்களை போலீசார் கீழே இழுத்து போட்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் அங்கு வந்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை சமாதானம் செய்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் வந்து பேசியும் அவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை.
கொட்டும் மழையில்...
கலெக்டர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மழையில் நனைந்து கொண்டே அவர்கள் கோஷம் போட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 141 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் நேற்றும் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.