விளைநிலங்களுக்குள் புகுந்த 7 காட்டுயானைகள் நெற்பயிர், மாமரங்களை சேதப்படுத்தி அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த 7 காட்டு யானைகள் நெற்பயிர், மாமரங்களை நாசப்படுத்தியது. அந்த யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
பேரணாம்பட்டு,
குடியாத்தம் அருகே சைனகுண்டா வனப்பகுதியையொட்டிய விளை நிலங்களில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு 21 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து பயிர்களை நாசம் செய்தன. அந்த யானைகளை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஒரு வழியாக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் 7 காட்டு யானைகள் பேரணாம்பட்டு பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டன. நேற்று அதிகாலை பேரணாம்பட்டு அருகே உள்ள முத்துக்கூர் பாத்தபாளையம் பகுதியில் உள்ள தனம்மாள், சின்னசாமி ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் ஆந்திர வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு குட்டியானை உள்பட 7 யானைகள் புகுந்தன. அந்த காட்டு யானைகள் 1½ ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை மிதித்து நாசம் செய்தது.
தீவன பயிர்
பின்னர் அவை ராஜம்மா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்புக்குள் புகுந்து 7 மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது. மேலும் வெங்கடபெருமாள், லோகநாதன் ஆகியோரின் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தீவனப்பயிர்களையும் நாசப்படுத்தின. இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வனத்துறையினர் அங்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். எனினும் அந்த யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் திரும்பி வரலாம் என்பதால் விவசாயிகள் நிம்மதியை இழந்து உள்ளனர்.