செம்மஞ்சேரி பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுகிறது 100–க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி மற்றும் எழில்முகநகர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.;

Update: 2017-09-13 22:15 GMT

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவகர்நகர் மற்றும் எழில்முகநகர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வரும் காய்ச்சல், அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவி வருகிறது. இந்த வகையில் அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15–வது மண்டலத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்