நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Update: 2017-09-13 22:45 GMT

சிவகங்கை,

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதேபோல் சிவகங்கையில் மாவட்ட தி.மு.க. மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன், திண்டுக்கல் லியோனி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமொழி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமரூல்ஜமான், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சாமி திராவிடமணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்.

 ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்