மண் சரிவை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்

மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட இடத்தில் மண் சரிவை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2017-09-13 12:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10-ந் தேதி நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் ரோடு மரப்பாலம் அருகே இருந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரும் சேதமடைந்தது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இத்ை-தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குழந்தைசாமி தலைமை யில் ஊழியர்கள் தரைப்பாலத்தை சீரமைக்கும் மேற்கொண்டனர். அவர்கள் மிகவும் துரிதமாக செயல் பட்டதால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் இரவே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதையடுத்து தரைப்பாலத்தின் ஓரத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தடுப்புச்சுவர் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் இன்றி தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல சென்று வந்தன. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்