ஆகாய தாமரைகளால் காமராஜ்சாகர் அணை நீர் மாசுபடும் அவலம்
மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆகாயதாமரைகளால் காமராஜ்சாகர் அணை நீர் மாசுபடும் அவலம் உள்ளது.
ஊட்டி,
மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆகாயதாமரைகளால் காமராஜ்சாகர் அணை நீர் மாசுபடும் அவலம் உள்ளது. எனவே அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காமராஜர் ஆட்சி காலத்தின் போது, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள தலைக்குந்தா பகுதியில் காமராஜ் சாகர் அணை கட்டப்பட்டது. இந்த அணை 36 அடி உயரம் கொண்டது. உயரம் குறைவாக இருந்தாலும், அணை அகலமாக இருப்பதால் அணையில் அதிகளவு தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம்.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கால்வாய் வழியாக கிளன்மார்கன் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுரங்கப்பாதை மற்றும் ராட்சத குழாய்கள் மூலம் சிங்காரா நீர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்யாததால், காமராஜ்சாகர் அணை வறண்டது. இதனால் மின் உற்பத்திக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் காமராஜ்சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. இதை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூட்டிங்மட்டம் அருகே 6-வது மைல் பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து ஆகாய தாமரைகள் அடித்து வரப்பட்டன. அவை காமராஜ்சாகர் அணையில் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அணையில் உள்ள தண்ணீர் மாசுபடும் அவல நிலை உள்ளது. எனவே அணையில் இருக்கும் ஆகாயத்தாமரைகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது:-
நீலகிரி மாவட்டத்தில் அதிக அணைகள் உள்ளன. இங்குள்ள அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு பைக்காரா, மாயார், கெத்தை, பரளி, மரவகண்டி, குந்தா உள்ளிட்ட 13 இடங் களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மின்சாரம் தேவையை பூர்த்தி செய்வதில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி இருக்க, தற்போது ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள காமராஜ் சாகர் அணையில் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அணையோரத்தில் கால்நடைகள் வந்து மேய்ந்து தண்ணீர் குடிப்பதால் சேற்றில் சிக்கும் அபாயம் உள்ளது. மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆகாய தாமரைகளை காமராஜ்சாகர் அணையில் இருந்து உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.