குன்னூர் அரசு பதனிடும் நிலையத்தில் தயாரித்த பழ ஜாம் பாட்டில்களை வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குன்னூர் அரசு பழ பதனிடும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி பாட்டில்களை வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.;

Update: 2017-09-13 09:00 GMT
குன்னூர்,

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலைத்துறையின் நிர்வாகத்தின் கீழ் அரசு பழப்பண்ணை உள்ளது. இங்கு பிளம்ஸ், பீச், ஊட்டி, ஆப்பிள், பெர்சிமன் போன்ற பழ வகை மரங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே அரசு பழ பதனிடும் நிலையம் உள்ளது. இதில், அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் இருந்து கிடைக்கும் பழங்களை கொண்டு ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் ஸ்டாபெர்ரி பழம் சீசன் நல்ல முறையில் இருந்தது. எனவே ஸ்டாபெர்ரி பழம் மூலம் ஜாம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஜாம் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது அரசு பழ பதனிடும் நிலையத்தில் பப்பாளி, பேரிக்காய், வாழை ஆகிய பழங்களின் கலவை ஜாம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜாம் 300 கிராம் கொண்ட பாட்டில் ரூ.80-க்கும், 500 கிராம் பாட்டில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிம்ஸ் பூங்கா, கல்லார் பழப்பண்ணை, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் ஜாம் பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் 2- வது சீசன் தொடங்கி உள்ளது இந்த சீசனை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் அரசு பழம் பதனிடும் நிலையத்தில் உற்பத்தி செய்யப் பட்ட ஜாம் பாட்டில்களை ஆர்வமுடன் விரும்பி வாங்கி செல் கிறார்கள்.

மேலும் செய்திகள்