முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரிப்பு டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் கைது
கரூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக நேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை கண்டித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர்.
கரூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னரில் எரிக்க போவதாக நேற்று மதியம் 1.30 மணி அளவில் தகவல் பரவியது. இதையடுத்து கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் ஏராளமானோர் பஸ் நிலையம் அருகே குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் மதியம் 2 மணி அளவில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அப்போது திண்ணப்பா கார்னர் அருகே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
மேலும் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி விட்டு அங்கிருந்து சிறிது நேரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது குறித்து பஸ் நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் பஸ் நிலையத்தில் இருந்து வாகனங்களில் ராமகிருஷ்ணாபுரத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஊர்வலமாக வந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் உருவபொம்மையை எரித்ததற்காக கைது செய்வதாக போலீசார் கூறினர். அப்போது ஒருவர் உருவபொம்மையை நாங்கள் எரிக்கவில்லை என்றார். இதனால் போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து வேனில் ஏற்றினர். மேலும் அலுவலகத்தின் உள்ளே சென்றவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது கைதானவர்கள் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
இதில் மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஒவ்வொருவரது பெயர், விவரம் சேகரிக்கப்பட்டன. அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கரூரில் முதல்- அமைச்சர் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.