சசிகலா நியமனம் செல்லாது என அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சசிகலா நியமனம் செல்லாது என அறிவிப்பு: திருச்செங்கோட்டில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Update: 2017-09-12 22:45 GMT
திருச்செங்கோடு,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதை வரவேற்று திருச்செங்கோடு நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இதில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி தலைமையில் நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். 

மேலும் செய்திகள்