ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலி தொழிலாளி. இவரது மகன் ராகவன்(வயது 5) இவன் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதனால் அவனை பெற்றோர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகவன் பரிதாபமாக உயிரிழந்தான். ராகவனின் அண்ணன் மாதேஷ் (7) என்பவனும் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னப்பநாயக்கனூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.