இறந்த குட்டியை தூக்கி கொண்டு 2 நாட்களாக திரியும் குரங்கு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு ஒன்று தனது இறந்த குட்டியை கையில் தூக்கி கொண்டு அங்கும் இங்கும் சுற்றியவாறு அலைந்து கொண்டிருந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை தாய் குரங்கு ஒன்று தனது இறந்த குட்டியை கையில் தூக்கி கொண்டு அங்கும் இங்கும் சுற்றியவாறு அலைந்து கொண்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள ஒவ்வொரு மரக்கிளையிலும் இறந்த குட்டியுடன் திரிந்து கொண்டிருந்தது.
பின்னர் அந்த குரங்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்திலும் இறந்த குட்டியை தன் கையில் இருந்து கீழே இறக்காமல் சுற்றிக்கொண்டு திரிந்தது. தாய் குரங்கு தனது இறந்த குட்டியை ஒரு கையில் தூக்கி கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் அங்கும் இங்கும் திரிந்தது காண்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.