வருகிற 28–ந் தேதி தேர்தல்: பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு?
பெங்களூரு மாநகராட்சிக்கு வருகிற 28–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேயர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சிக்கு வருகிற 28–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேயர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
28–ந்தேதி தேர்தல்பெங்களூரு மாநகராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேயர் பதவியை பொறுத்தவரையில் மேயரின் பதவி காலம் ஓராண்டு மட்டுமே. அதனால் 2 ஆண்டுகளில் 2 மேயர்கள் பதவி வகித்தனர். முதல் ஆண்டில் மஞ்சுநாத்ரெட்டி மேயராக இருந்தார். 2–வது ஆண்டில் தற்போது பத்மாவதி மேயராக உள்ளார். இவருடைய பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் 3–வது ஆண்டுக்கு புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 28–ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேயர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி இந்த ஆண்டும் தொடரும் என்று கூறப்படுகிறது.
ஆதரவு வழங்குமாறு...இதில் மேயர் பதவியை காங்கிரசுக்கும், துணை மேயர் பதவி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், டி.ஜே.ஹள்ளி வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ள சம்பத்ராஜிக்கோ அல்லது சுபாஷ்நகர் வார்டு கவுன்சிலர் கோவிந்ராஜிக்கோ கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேயர் தேர்தல் தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடாவை போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆதரவு வழங்குமாறு ராமலிங்கரெட்டி கேட்டார். அதற்கு ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக தேவேகவுடா கூறியதாக தெரிகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு துணை மேயர் பதவி மற்றும் 4 நிலைக்குழு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று தேவேகவுடா கேட்டதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை வைத்துள்ளார்மேலும் மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் இட ஒதுக்கீடு தங்களுக்கு சாதகமாக வழங்க வேண்டும் என்று தேவேகவுடா கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு ராமலிங்கரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் இந்த ஆண்டும் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. மதசார்பற்ற கொள்கையில் தேவேகவுடா அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தேவேகவுடா கூறியுள்ளார்“ என்றார்.