தாராபுரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,
தாராபுரத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொது தொழிற்சங்கத்தின் துணைச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட சி.ஐ.டி.யு துணைச்செயலாளர் கனகராஜ், தாலுகா செயலாளர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.