கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கோவில்பட்டியில் அரசு கல்லூரி மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-12 21:15 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் அரசு கல்லூரி மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூயில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சுமார் 1,100 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஒரு கல்லூரிக்கு 50 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 14 ஆசிரியர்களே உள்ளனர். அதிலும் ஜாக்டோ– ஜியோ போராட்டத்தால் 14 ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை. எனவே இந்த கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிலும் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

வகுப்பு புறக்கணிப்பு

ஒரு பாடத்துக்கு 75 ரூபாயில் இருந்து 115 ரூபாயாக உயர்த்தப்பட்ட இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு கட்டணத்தை குறைத்து, பழைய கட்டணத்தையே கொண்டு வர வேண்டும். 175 ரூபாயாக உள்ள முதுகலை பட்டப்படிப்பு தேர்வு கட்டணத்தையும் குறைக்க வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவ–மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்